Sunday, December 22, 2013
Wednesday, November 27, 2013
Saturday, November 9, 2013
Wednesday, October 30, 2013
Thursday, September 26, 2013
பல்வேறு இதழ்கள் வெளியிட்ட வாசகன் பதிப்பக வெளியீடான கவிஞர் ஏகலைவன் அவர்களின் "இப்படிக்குத் தோழன்" நூலின் நூல் அறிமுகம் மற்றும் நூல் விமர்சனம்
நன்றி - திருமதி. கி. இராஜேஸ்வரி
நன்றி - கவிஞர், விமர்சகர் பொன்.குமார்
நன்றி - வடக்கு வாசல், இந்தியா டுடே, பொதிகை மின்னல், கவிஓவியா
நன்றி - உங்கள் நூலகம், கலைமகள், நம்பிக்கை வாசல், அறிவே துணை
பல்வேறு இதழ்கள் வெளியிட்ட வாசகன் பதிப்பக வெளியீடான கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் அறிமுகம் மற்றும் நூல் விமர்சனம்
நன்றி - வடக்கு வாசல், இந்தியா டுடே, உங்கள் நூலகம், புன்னகை, பொதிகை மின்னல், தினத்தந்தி
நன்றி - அறிவே துணை, கவிஓவியா
நன்றி - கவிஞர், விமர்சகர் புதுவை வ. பழனி & புதுவை பாரதி இதழ்
நன்றி - பாவையர் மலர் , நம்பிக்கை வாசல்
Friday, August 16, 2013
WATER MANAGEMENT
Historical perspective and development
EDITOR
S. ANBAZHAGAN
ISBN – 978 – 93 – 83188 – 01 – 7
Price – Rs. 300
Water is one of the basic
requirements for the mankind for his survival. Water on the Earth is available
in various forms including sea water, ice, lakes, river and groundwater. Sea water
occupies in major percentages on the earth, however it is not directly useful
for men in day to day life. Similarly, the large quantity of fresh water
available in the polar region in the form of ice which is also not readily
available. The surface and groundwater are the main source of water being
utilized for cultivation, drinking water and domestic purposes. The surface reservoirs
and groundwater aquifers are being receiving water through rainfall. In Indian subcontinent,
agriculture activities are the prime source of livelihood for the majority of
the population. If monsoon fails, there will be scarcity of water for
irrigation as well as domestic need. This has lead to prevailing of frequent
drought condition in many parts of the country. The conjunctive use of surface
and groundwater may solve this problem to some extent. However, a full proof of
water management practices is yet to be adopted in this country. The year old
traditional water management practices are gradually vanishing. The surface
water reservoirs like lakes, ponds, small streams were eliminated due to fast
growing urbanization and industrial development. In this context, it is
necessary to review the historical method of water management practices,
particularly in South India. In addition, the recent developments in water
development need to be addressed. In this regard, a Regional Workshop on “Artificial
Recharge and Watershed Management” was conducted at Periyar University through
UGC sponsored project. Geologists, groundwater engineers, NGO’s, academic
professionals, scholars and students were attended the meeting. The purpose of
the Regional Workshop was to explore the ideas and methods of historical and
recent trends of water management practices. The research articles presented in
the Workshop are published as proceeding in this book. The book comprises of
seven articles on various subjects include Irrigation and water management techniques
in the history of Tamil Nadu and in India, irrigation management and economic
transformation, ground water development and management, sustainable
agriculture practices, GIS technique in artificial recharge studies and water
level fluctuation study. The collective information available in this book will
be useful for the field level scientists, academicians and students.
S.ANBAZHAGAN
(In the
Preface of the book)
For
Books
VASAGAN
PUBLICATIONS
11/96
Sangili Aasari Nagar
Sanniyasigundu
Salem
– 636015
Mobile - 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com
www.facebook.com/vasaganpathippagam
Wednesday, August 14, 2013
நூல் அறிமுகம்
வாசகன் பதிப்பக புதிய வெளியீடு
இதெல்லாம்
ஒரு புத்தகமா….!
கவிதைத்
தொகுப்பு
கவிஞர்
சி. தணிஜோ
ISBN 978-81-924351-8-3
96 பக்கங்கள்
விலை ரூ. 70 / -
ஒரு மனிதனின் இளமைப்பருவம் என்பது இரத்தத்தில் வேகத்தையும், புத்தியில் ஆர்வத்தையும் ஒரு சேரக் கொண்டமைந்தது.
அந்தப் பருவத்தில் செய்யும் செயல்கள் எல்லாமே சரியானதாகவே தோன்றும். அந்த எண்ணத்தின் விளைவால் மனசுக்குள் தோன்றும் நம்பிக்கை, தைரியம் போன்றவை எல்லாம் அனுபவம் கொடுக்கத் தவறும் விஷயங்கள் எனலாம்.
வாலிப வயதுக்கேயுரிய இளமைத் துள்ளலோடும் சிறிதளவிலான மொழி கலப்போடும், எண்ணத்தை பதிவாக்கும் ஆர்வத்தோடும் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மழையாய் நம்மை நனைக்கையில், சிறு தூறலில் நனைந்து சுகப்படும் மழலை போல சிலிர்க்கிறது மனசு. ஆனால், அதுவே அடர்த்தியான மழையாய் பெய்தால் மகிழ்வோமா? என்ற கேள்வி சிந்தினைக்குரியது.
எனினும், No Magic, No Logic என்று சொல்வதைப்போல சில விஷயங்கள் ரசிக்க மட்டுமேயானவை என்ற அடிப்படையில் சிந்திப்பதை ஓரம் வைத்துவிட்டு இந்த நூலில் இடம் பெற்றுள்ள சின்னச் சின்ன ரசனைகளை நாமும் ரசிப்போம்.
- வாசகன் பதிப்பகத்தார்
நூலின் பதிப்புரையில்…
நூல் தேவைக்கு…
கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com
Friday, August 2, 2013
சமூக நலம் பயக்கும் நல்விதைகளை விதைக்கும் குழந்தைகளைத் தேடும் கடவுள்
கவிஞர் இரா.இரவி விமர்சனம்
'குழந்தைகளைத் தேடும் கடவுள்'
நூல் ஆசிரியர் கவிஞர் ச .கோபிநாத், 9790231240
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வெளியீடு வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசி குண்டு
சேலம் .636015. செல் 9944391668.
உயிரூட்டிய பெற்றோருக்கும் .அறிவூட்டிய ஆசிரியர்களுக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை ,அட்டைப்பட வடிவமைப்பு அச்சு ,உள் ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தி வாசகன் பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் ஹைக்கூ ஆய்வுக் கவிஞர் மு .முருகேஷ் ,பேராசிரியர் முனைவர் மித்ரா இருவரின் அணிந்துரையும் மிக நன்று
.
'குழந்தைகளைத் தேடும் கடவுள் 'என்பதை விட 'கடவுளைத் தேடும் குழந்தைகள் 'என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் .குழந்தைகளிடம் கடவுளை வணங்கு என்று நாம் கற்பிக்கும்போது குழந்தைகள்தான் கடவுள் எங்கே என்று தேடுகின்றன .
நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு இந்த நூல் இரண்டாவது நூல் .சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல் இது.என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது. தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்ட காரணத்தால் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன் .எப்போதாவது பார்த்தால் விஜய் தொலைக்காட்சியில் திரு ,கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா ? நானா ? நிகழ்ச்சி மட்டும் பார்ப்பதுண்டு .காரணம் .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக விவாதித்து வருகிறார் .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களும் நீயா ? நானா ?திரு ,கோபிநாத் போல எதிர் காலத்தில் புகழ் பெறுவார் .அந்த அளவிற்கு விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .
.அடுத்த வீட்டில் வசிப்பது யார் என்று தெரியாமலே அடுக்ககங்களில் வாழ்ந்து வருகின்றனர் .பழங்கால நேசம் ,பரிவு ,அன்பு ,மனித நேயம் இன்று இல்லை .அடுக்ககங்களின் அவலம் சுட்டும் ஹைக்கூ .
தோப்பு
தனிமரமானது
அடுக்கக வாழ்க்கை !
ஓவியம் வரைதல் ,இசை இசைத்தல் ,பாடல் பாடுதல் ,மேடையில் பேசுதல் இப்படி பல்வேறு திறமைகள் இருந்தாலும் திருமனதிற்குப் பின் ' இல்லத்தரசிகள் 'என்ற பெயரில் பெண்களின் திறமை முழுவதும் வீணடித்து விடும் அவலம் உணர்த்தும் ஹைக்கூ .
அடிப்படிகளில்
பொசுக்கப்படுகின்றன
பெண்களின் திறமைகள் !
காதலை எழுதாத கவிஞன் இல்லை .காதலை எழுதாதவன் கவிஞன் இல்லை ..காதலை ஊறுகாய் அளவிற்கு கொஞ்சமாய் எழுதுவது நன்று .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் காதலைகொஞ்சமாய் எழுதியது சிறப்பு .
நம்மை அறிந்தே
நாம் தொலையும்
காதல் !
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் இருந்தால் உண்மையில் வருந்துவார் .அறிவியல் கண்டுபிடிப்பில் மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசும் விதமாக தொலைக்காட்சியில் சோதிட நிகழ்சிகள் . எந்த வண்ணத்தில் சட்டை போட வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் நமது சட்டை வண்ணத்தை சோதிடர் சொல்வார் .என்ன கொடுமை இது .இந்த அவலத்தைக் கண்டிக்கும் ஹைக்கூ .
தொலைக்காட்சியில் சோதிடம்
அறிவியல் விதைக்கும்
மூட நம்பிக்கை!
.முன்பெல்லாம் கடைக்குச் செல்லும்போது கையில் பை எடுத்துச் செல்வோம் .இப்போது பலரும் பை எடுத்துச் செல்வதில்லை .நெகிழிப் பைகளே எங்கும் எதிலும் என்றாகி விட்டது .நெகிழிப் பையை தின்னும் விலங்குகள் இறந்து வருகின்றன .
தொண்டை நெறிக்கும்
நெகிழிப் பைகள்
அழியத் தொடங்கின விலங்குகள் !
குழந்தைகள் இருக்கும் வீடு என்பதற்கு அடையாளம் சுவரில் கிறுக்கல்கள் இருக்கும் . வாடகை வீடாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் பார்த்தல் வசை பாடுவார் .அவருக்குத் தெரியாது புரியாதுகுழந்தைகள் மனசு .
சுவரெங்கும்
கிறுக்கல்கள்
குழந்தைகளின் வீடு !
நம் நாட்டில் ஏவுகணைங்கள் ஏவுகின்றனர் .விரைவில் வல்லரசு ஆகப் போகிறோம் என்று மார் தட்டிக் கொள்கிறோம் .ஆனால் ஏழைகளின் வறுமை மட்டும் இன்னும் ஒழியவே இல்லை .அரசியல்வாதிகள் அவர் வறுமை அவர் மக்கள் வறுமை ஒழித்து வளமாகி பெரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் .மக்களின் வறுமை மட்டும் அப்படியே தொடர்கின்றது .பலரின் வாழ்க்கை வீடு .
பாதசாரிகளே கவனம்
சாலையோரம்
வீடுகள் !
உலகில் உள்ள எல்லாக் கவிஞர்களின் பாடு பொருள் நிலா என்பது உண்மை .இவரும் நிலாவைப் பாடி உள்ளார்.
அதிகம் பாடப்பட்டும்
அழகு குன்றவில்லை
நிலா !
நிலவிற்கு அழகு குன்றவில்லை . கூடிக் கொண்டேதான் போகின்றது .
தந்தை பெரியார் இறுதி மூச்சு உள்ளவரை நம் நாட்டில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க போராடினார் . ஆனால் இன்னும் மூட நம்பிக்கை .ஒழியவில்லை கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிப் பழக்கம் தொடர்வது வேதனை .
சாலையெங்கும் சிதறின
எலுமிச்சைகளின் வடிவில்
மூட நம்பிக்கைகள் !
இன்றைய திரைப்படப் பாடல்கள் கொச்சையாகவும் பச்சையாகவும் ஆங்கிலச் சொற்கள் கலந்தும் வருகின்றன .இதன் பொருள் தெரியாமலே குழந்தைகள் மனப்பாடம் செய்து விடுகின்றனர் .
முக்கியத்துவம் இழந்தது
மனப்பாடச் செய்யுள்
திரைப்பாடல் !
சமுதாயதிற்கு நன்மை பயக்கும் விதமாக விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளார் ..நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

Saturday, July 27, 2013
Saturday, July 6, 2013
குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் விமர்சனம் - முனைவென்றி நா. சுரேஷ்குமார்
குழந்தைகளைத் தேடும் கடவுள்
விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்
இந்நூல் கவிஞரின் இரண்டாவது நூலாகும். இந்நூலில் பல்வேறு கருப்பொருள்களில் ஹைக்கூ கவிதைகளை செறிவுடன் படைத்துள்ளார்.
‘கோடுகள் நெளியும் கோலம்
நிமிர்ந்து நின்றது
அம்மாவின் கலைத்திறன்’
தாய்மார்களின் கலைத்திறனை, அவர்களின் உழைப்பை உணர்த்துகிறது.
தான் ஒரு ஆசிரியர் என்பதால் மனனக் கல்விமுறையைப் பற்றி காட்சிப் படுத்தியுள்ளார்.
தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மட்டுமே பெற்றோர்களாக இருக்க முடியும். ஆனால் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் கோடான கோடிக் குழந்தைகளுக்கும் தாயாய்த் தந்தையாய் விளங்கக் கூடியவர்கள். அதனாலேயே பள்ளி ஆசிரியரான கவிஞரும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளை யாத்துள்ளார்.
அறிவியல் சாதனங்களால் விளையும் தீமைகள், பூமி வறட்சியின் விளைவு, தனிக்குடித்தன வாழ்க்கையைப் பற்றி, நன்றி மறக்காத நாய்களைப் பற்றி என காட்சிகளை நம் கண்முன்னே தருகிறார் தன்னுடைய ஹைக்கூகளின் வழியே.
‘பசுவின் காம்பில்
இனிதே சுரக்கிறது
தாய்மை’
பசுவின் காம்பில் பால்தான் சுரக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். கவிஞரின் பார்வையில் தாய்மை புலப்படுகிறது.
காதலைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
‘நம்மை அறிந்தே
நாம் தொலையும் உலகம்
காதல்’
தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கும் வறட்சிக்கும் இராமநாதபுரம் மாவட்டத்தையே உதாரணமாகச் சொல்லுவார்கள். இன்றும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்,
‘வீணாகவில்லை
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை’
என்ற ஹைக்கூ, பறவையைப் பாடுகிறது. இப்படி வீணாகிறதே தண்ணீர் என்று சொல்ல முற்படுபவர்கள் முன் தாகம் தணிக்கும் பறவையைக் கண்டு அப்படி சொல்லாமலேயே சென்று விடுவார்கள்.
ஜாதிகளைக் கண்டு கொதித்தெழுகிறார் இப்படி.
‘நாகரீக மனிதன்
நாற்றமெடுகிறது
ஜாதிய மணம்’
மூட நம்பிக்கைகளைப் பற்றி, காணாமல்ப் போன தமிழர் விளையாட்டுகள் பற்றி என தன் ஹைக்கூ கவிதைகளால் வாசர்கள் மனம் நிறைக்கிறார்.
மொத்தத்தில், குழந்தைகளைத் தேடும் கடவுள் – சமூக நலனைத் தேடும் மனிதன்.
Sunday, June 16, 2013
Sunday, June 9, 2013
குறையொன்றுமில்லை ...
நூல் விமர்சனம்
கவிஞர் இரா .இரவி .
நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன்
செல் 8428729494.kavignareagalaivan@gmail.com
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர் ,
சன்னியாசிகுண்டு ,
சேலம் .636015.
விலை ரூபாய் 60.
நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தொடர் வண்டி விபத்தில் ஒரு காலை இழந்த போதும் தன்னபிக்கையை மட்டும் என்றும் இழக்காதவர் .மாற்றுத்திறனாளி என்பதையே மறந்து ஓய்வின்றி உழைக்கும் உழைப்பாளி .பல்வேறு விருதுகளும், பரிசுகளும் பெற்ற கவிஞர் ,எழுத்தாளர் .இந்த நூலிருக்கு கவிதைஉறவு இதழின் விருது கிடைத்துள்ளது .பாராட்டுக்கள் .
குறையொன்றுமில்லை நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் நம்பிக்கை வாசல் மாத இதழின் ஆசிரியர் தன் இதழில் எழுதிய கட்டுரைகளையும் , பிற இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .தன்னம்பிக்கை விதைக்கும் 23 கட்டுரைகள் உள்ளன .
நல்ல கனவு காணுவோம் ,திட்டமிடுவோம் ,பயிற்சி ,முயற்சி ,உழைப்போம் ,வெற்றி பெறுவோம் .சாதனை நிகழ்த்துவோம் என்று சொல்லித்தரும் நூல் இது .
வாழ்க்கையில் விரக்தி ,சோகம் உள்ளவர்கள் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும் .உங்களுக்குள் மாற்றம் விளைவிக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம் .
.கட்டுரைகளுக்கு மிகப் பொருத்தமாக புகைப்படங்கள் ,வடிவமைப்பு ,அச்சு ,அட்டைப்படம் என யாவும் மிக நன்று .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் .அவர்களே சொந்தமாக வாசகன் பதிப்பகம் தொடங்கி தனது நூல்களையும் பிறர் நூல்களையும் தரமாகப் பதிப்பித்து வருகிறார் .பாராட்டுக்கள் .
முல்லா அவர்கள் "எந்த கஷ்டமும் படாமல் லட்சாதிபதி ஆக வழி சொல்கிறேன் என்றதும் ,பெரும் கூட்டம் கூடி விடுகிறது .அவர்களிடம் முல்லா அவர்கள் சொன்னார் ."நாட்டில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்டேன் .என்றார் .
இதுபோன்ற சின்னச் சின்ன நிகழ்வுகள் ,கதைகள் பொன்மொழிகள் ,தன்னம்பிக்கை விதைகள் நூலில் ஏராளம் .
கல்வியின் மேன்மையை ,சிறப்பை பல கட்டுரைகளில் வடித்துள்ளார் .தடைகள் எல்லாம் தடைகளல்ல கட்டுரையில் தெனாலி ராமன் கதை உள்ளது .
" ஒரு சிக்கலை தடைக்கல்லாகப் பார்ப்பதும் படிக்கல்லாகப் பார்ப்பதும் நம்முடைய
பார்வையின் கோணத்தில்தான் அமைந்துள்ளது .நேர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் படிக்கல்லாகத தோற்றமளிக்கிறது .எதிர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் தடைக்கல்லாகத் தோற்றம் தருகிறது ."
இதுபோன்ற பல பயனுள்ள கருத்துக்கள் நூலில் உள்ளன .இதை படிததும் என் நினைவிற்கு வந்தது ,
ரோஜாச்செடியைக் காட்டியபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ரோஜா உள்ளது .என்றான் . எதிர்மறைப் பார்வை கொண்டவன் முட்கள் உள்ளன என்றான்.
தண்ணீர் உள்ள ஜாடியைக் காண்பித்தபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ஜாடியில் தண்ணீர் உள்ளது என்றான் .எதிர்மறைப் பார்வை கொண்டவன் பாதி ஜாடியில் தண்ணீர் இல்லை என்றான் .
இந்த நூல் படிக்கும்வாசகனுக்குநேர்மறைசிந்தனையைக் கற்பிக்கும்விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .
உடற்குறைகள் தடையல்ல கட்டுரையில் கலைமாமணி எஸ் .ஆர் .கிருஷ்ண மூ ர்த்தி ,ஜப்பான் ஹிரடோடோ ஓட்டோக் , நிக்வஜிசிக் ஆகியோரின் புகைப்படங்களுடன் ,மாற்றுத் திறனாளிகளின் சாதனைகளை விளக்கி உள்ளார் .நிக்வஜிசிக் அவர்களின் திறமையை யூ டி யுபில் பார்த்து வியந்து இருக்கிறேன் .மேலே உள்ள மூன்று பேருக்கும் கைகள் இல்லை இடுப்புக்குக் கீழ் எதுவும் இல்லை .அவர்கள் சாதிக்கும்போது .கை கால் நன்றாக உள்ள நாம் ஏன் சாதிக்கக் கூடாது ? என்ற உந்து சக்தி விதைக்கும் விதமாக நூல் உள்ளது .
"கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல. கவிதையாக வாழ்பவனே கவிஞன்." என்ற மகாகவி பாரதியின் கூற்றுப்படி நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியபடி வாழ்ந்து வருபவர் .குடத்து விளக்காக இருந்த பல
மாற்றுத்திறனாளிகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவர் .இந்த நூலில் நூல் ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பாராட்டுக்கள் .இந்த நூலிற்கு இன்னும் பல விருதுகள் வரும் .வாழ்த்துக்கள் .
நன்றி
கவிஞர். இரா. இரவி, மதுரை
--
http://www.tamilthottam.in/Wednesday, May 15, 2013
Friday, May 10, 2013
நூல் அறிமுகம்
வாசகன் பதிப்பக புதிய வெளியீடு
இறைவன் தந்த பரிசு
ISBN 978-81-924351-7-6
கவிதைத் தொகுப்பு
ம. கதிர்வேல்
64 பக்கங்கள்
விலை ரூ. 35 / -
இளம் வயதிலேயே குழந்தைத் தொழிலாளியாகி வாழ்க்கைப் போராட்டங்களுக்குள் சிக்குண்டு இளமையைக் கடந்தாலும், காலம் கடந்து நிலைத்திருக்கும் கவிதைப் பூக்களால் மீண்டும் வசந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள இறைவன் தந்த பரிசு கொண்டு வருகிறார் ம. கதிர்வேல்.
- பதிப்பகத்தார்
நூலின் பதிப்புரையில்
“மாந்தர் மனக்கோட்டம் தீர்ப்பது நூல்” ஆனால் இந்தக் கவிஞர் மரக்கோட்டம் தீர்க்கும் நூலோடு மட்டுமே தொடர்புடையவர். வியப்பாயிருக்கிறது. இவருக்குள் உறைந்திருகும் கவிதா உணர்வுகளை இளமையிலேயே இனங்கண்டு ஊதிவிட யாரேனும் முன்வந்திருந்தால் தமிழுக்கு பெரும் வரவு கிட்டியிருக்கும்.
கற்பதற்கு காலம் இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை, என்றாலும் தனக்குத்தானே ஓயாது போராடி இவர் கவிஞராக வெளிப்பட்டு இருக்கிறார். எந்தவித மனக்கூச்சமும் தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் இவர் தமிழ்செய்ய முற்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.
செதுக்கிச் சீரமைக்க வாய்ப்பில்லாத போதும் இந்தக் கவிஞர் சிலையாக சுயம்புவாக உருவெடுத்திருக்கிறார். இவர் உண்மையிலேயே இறைவன் தந்த பரிசு தான்.
- ‘சொற்சுவை நம்பி’ கவிஞர் பே.செ. சுந்தரம்
ஆத்தூர்
நூலின் அணிந்துரையில்
ம. கதிர்வேல் எழுதிய “இறைவன் தந்த பரிசு” என்ற இந்த கவிதைப் பெட்டகம், தமிழுக்கும் தமிழை நேசிப்பவர்களுக்கும் கிடைத்த வரம். எளிய நடை, முக்காலத்திற்கும் பொருத்தமான கருத்தாழமிக்க வரிகள், இனிய சொற்கள் என்று அனைத்துத் தரப்பினரும் வாசித்து மகிழும் உன்னத படைப்பு.
- கொத்தாம்பாடி முருகேசன்
திரைப்பட இயக்குனர்
நூலின் அணிந்துரையில்
நூல் தேவைக்கு…
கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com
Subscribe to:
Posts (Atom)