நூல் அறிமுகம்
வாசகன் பதிப்பக புதிய வெளியீடு
அன்புள்ள ஆத்தாவுக்கு....
ISBN
978-93-83188-09-3
சிறுகதைத்
தொகுப்பு
இராஜேஸ்வரி சிவா
96 பக்கங்கள்
விலை ரூ. 55 / -
“ஒளவைப் பிராட்டி, வை. மு. கோதைநாயகி அம்மாள்,
லட்சுமி, இந்துமதி, சிவசங்கரி எனப்பல பெண் படைப்பாளிகளை வரவேற்று வாழ்த்தும் தம்ழ்
இலக்கிய களத்தின் புதிய நட்சத்திரமாகத் திகழும் திருமதி. இராஜேஸ்வரி சிவா
அவர்களின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய அவரின் முதல் நூலினை எங்கள் பதிப்பகத்தின்
வாயிலாக வெளிக்கொணர்ந்து, வாசகர்களாகிய உங்களின் கரங்களின் சேர்ப்பதில்
பெருமகிழ்ச்சி அடைகிறோம்.”
-
வாசகன்
பதிப்பகத்தார்
பதிப்புரையில்
“குறைவான கதை மாந்தர்களைக் கொண்டு குறுகிய
நேரத்தில் படித்து முடிக்கும் வகையில் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில், தன்
உள்ளம் கவர்ந்த செய்திகளைக் கருவாக்கிக் கற்போர்க்கும் சிந்தனையைத் தூண்டி
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதைகளை அமைத்துள்ள நூலாசிரியர்
பாராட்டுக்குரியவர்.
இத்தொகுபிலுள்ள கதைகள் அனைத்தும் நடைமுறை
உலகில் நிகழும் யதார்த்தங்களையே பதிவு செய்கின்றன. ஆசிரியர் மக்கள் வாழ்வியல் நிகழ்வுகளைப்
படம் பிடித்துள்ளார். தன்னைச் சுற்றி நடக்கும் நிகவுகளைக் கதையாக்கியுள்ளமையால்
பொய்யோ, புனைந்துறையோ இக்கதைகளில் இல்லை.
படைப்பாளியின் தனித்துவம் இக்கதைகளில்
வெளிப்படுகின்றது. கதைத் தலைப்புகளையும் பொருத்தமுற அமைத்துள்ளார்”
-
பேராசிரியை சா.
நசீமா பானு
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்
அறிஞர்
அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி
காரைக்கால்
நூலின் அணிந்துரையில்
நூல் தேவைக்கு…
கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96
சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச
9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com
No comments:
Post a Comment