நூல் அறிமுகம்
வாசகன் பதிப்பக புதிய வெளியீடு
மரப்பாச்சிப் பொம்மைகள்
ISBN 978-981-07-9806-2
கவிதைத் தொகுப்பு
கவிஞர் தியாக. இரமேஷ்
96 பக்கங்கள்
விலை ரூ. 75 / -
“உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை..... உயிர்ப்போடு
இருப்பதுவே வாழ்க்கை....” என்று எளிய வரிகளால் வாழ்வின் பொருளைச் சொல்லும் எங்கள்
நட்சத்திரக் கவிஞர் தியாக.இரமேஷ் அவர்களின் இலக்கியப் பயணம் நீண்டு தொடர வாழ்த்தி,
தமிழ்கூறு நல்லுலகிற்கு நல்ல கவிதைகளைக் கொண்ட மரப்பாச்சிப் பொம்மைகள் நூலைப்
பரிசளிப்பதில் மகிழ்கிறோம்.”
-
பதிப்புரையில்
...
வாசகன் பதிப்பகத்தார்
“இனிய இயல்பு, அன்பு, அடக்கம், பாசம்
பொறுமையுடன் கூடிய நல்ல பண்பாளர் நமது நூலாசிரியர். தமிழ்ப் பண்பாட்டையும்
கலாச்சாரத்தையும் பின்பற்றிக் காக்கும் பெருமனம் கொண்ட படைப்பாளர். இமைப்பொழுதும்
பிறருக்குத் தீங்கு நினையாத இறைப்பற்றாளர். நீதிக்குத் தலைவணங்கும் நேர்மையின்
பிறப்பிடம். அத்தகைய சிறப்புடைக் கவிஞரிடம் நல்ல கற்பனைவளம்; சொல்வளம்;
சிந்தனைவளம் கொட்டிக்கிடக்கின்றன.”
-
அணிந்துரையில்...
புதுமைத்தேனீ மா. அன்பழகன்
காப்பாளர்
சிங்கப்பூர்
கவிமாலை அமைப்பு
சிங்கப்பூர்
“இங்கேதான் பிறந்தான்
சிங்கையில் சிறந்தான்
என் செல்லத்தம்பி தியாக.இரமேஷ்.
தம்பிக்கு ஆனவன்தான் அறிவுமதி
ஆனாலும் தம்பிகளால் ஆனவன்
என் ஈட்டல்... என் காத்தல் எல்லாம்
என் தம்பிகள்.... தம்பிகள்... தம்பிகள் தாம்.
என்
சிந்தனைக்கும்... செயலுக்கும் அருகில் வரும்
தம்பிகளில்
இவன்
அடிக்கோடு இடத்தக்கவர்களில் ஒருவன்.
சிங்கையில் நிகழ்வுறும் தமிழ்ச் செயல்கள்
அனைத்தையும் வரலாறுகளாக்கும் வகையில்
ஒலியில்... ஒளியில் பதிவுகள் செய்து
பாதுகாக்கும் இவனது உழைப்பு என்னை
வியக்க வைப்பது.
ஊற்றுனீர் நகர்வாய் வாய்ந்த கவிதை
ஆற்றலையும்... கைவிடாமல் எழுதிவரும்
எழுத்தாற்றலும் நம்மை மகிழ வைக்கிறாது.
இரண்டு அடி கொடுத்தால்தானே
திருந்துவாய்
வாங்கிக் கொள் வள்ளுவனிடம்!
இது நான்
மனித உயர்வுக்கு
பல குரல் தேவையில்லை
ஒரு குரள் போது!
இது தம்பி!”
-
அணிந்துரையில்
...
பாவலர் அறிவுமதி
திரைப்படப் பாடலாசிரியர்
சென்னை
“தமிழுக்குத் தாலாட்டு,
இந்தத் தொகுப்புக்கு நல்ல ஆரம்ப வாசல்
சிங்கப்பூரைப் பற்றிய அறிமுகமும்
சிங்கைத் தந்தையைப் புகழும் பாட்டும் அற்புதம்
ஞாயிறு தூங்குவதில்லை மரி
ஞாயிறே தூங்கினாலும் நாம் தூங்கவேண்டாம்
என்ற அறைகூவலில் உழைப்பும்
உறவுகளின் எதிர்பார்ப்பு ஏக்கமும்
இழைந்தோடுகிறது.”
-
வாழ்த்துரையில்
...
முனைவர். மயில்சாமி அண்ணாதுரை
சந்திராயன்
திட்ட இயக்குநர்
பெங்களுரு.
நூல் தேவைக்கு…
கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96
சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச
9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com
vazhlththukkal
ReplyDeletewww.glamourmediaentertainment.blogspot.com
ReplyDelete