Monday, February 17, 2014



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

பச்சை மலைக்குயில்

ISBN 978-93-83188-05-5

சிறுகதைத் தொகுப்பு
துறையூர் க. முருகேசன்

128 பக்கங்கள்
விலை ரூ. 60 / -

“மூடப்பழக்க வழக்கங்களும், அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களும் பெருகி வருகின்ற இன்றைய நாட்களில், விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மனங்களில் பகுத்தறிவை உண்டாக்க சில நல்ல நூல்களும் அவ்வப்போது வெளிவர வேண்டும் என்பதே சமூக அக்கறையாளர்களின் கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது பச்சை மலைக்குயில் சிறுகதை தொகுப்பு.

பகுத்தறிவின் தீப ஒளியை உயர்த்திப்பிடிக்கும் இந்த பச்சை மலைக்குயில் சிறுகதைத் தொகுப்பை எங்கள் வாசகன் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டு மக்களிடம் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.”

-    வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்

“க. முருகேசனின் சிறுகதைகளை வாசித்தேன். கடவுள் வழிபாடு, பூஜை புனஸ்காரம், பேய் பூத எண்ணங்கள் போன்ற மூட நம்பிக்கைகளை போர் குணத்துடன் சாடியிருகிறார்.

மூடநம்பிக்கை எனும் கனத்த இருட்டுக்கு எதிரான அறிவொளி தீபங்களாக இவரது சிறுகதைகள் சுடர்கின்றன. மூடநம்பிக்கைகளால் வருகிற சேதாரங்களையெல்லாம் இந்த சிறுகதைகள் சுட்டிக்காட்டி அறிவுப்பூர்வமான சிந்தனையை ஏற்படுத்துகிறது.

துறையூர் க முருகேசனை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். சிறுகதை எனும் மூட நம்பிக்கைகளுக்கெதிராக சுழற்றியிருக்கிற அவரது வீரத்தை நிச்சயமாகப் பாராட்டலாம்.”

-    எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி
நூலின் அணிந்துரையில்

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8682994697, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment