Tuesday, October 28, 2014

நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

உண(ர்)வுத் திருவிழா

ISBN 978-93-83188-18-5

கவிதைத் தொகுப்பு
கவிஞர் நா.கி.பிரசாத்

64 பக்கங்கள்
விலை ரூ50 /-



“தமிழின் முன்னணி வார, மாத இதழ்களில் தன் சுவாரஸ்யமிக்க படைப்புகளின் வாயிலாக தனக்கென தனியிடம் பிடித்திருக்கும் இவரின் இரண்டாம் படைப்பிலக்கியமாக மலர்ந்துள்ள இந்த ஹைக்கூ திருவிழா வாசகர்களின் இரசனையை மேலும் ஒருபடி உயர்த்தும் என்பதில் ஐயமில்லை”

-    பதிப்புரையில்...
வாசகன் பதிப்பகத்தார்

“இன்று தமிழில் ஹைக்கூ எழுதுபவர்கள் ஏராளம். அவற்றில் நிறைய ஹைக்கூக்கள் வெறும் தகவல் திரட்டுக்களாகவே இருப்பதில் ஏற்படும் ஏமாற்றத்தை மிக நல்ல ஹைக்கூ கவிதைகள் ஈடுகட்டுகின்றன.

உணர்வுத் திருவிழா அப்படியொரு நல்ல தொகுப்பு. திரு நா.கி.பிரசாத் சுருங்கச் சொல்லவும் சுவைபடச் சொல்லவும் தெரிந்தவர் என்பதை இத்தொகுப்பை வாசிப்பவர்கள் கண்டுணர்வார்கள்.

உணர்வுத் திருவிழாவில் ஹைக்கூவை தோள்மேல் அமர்த்தி வலம்வரும் நேர்த்தியை தமிழ் வாசகர்கள் கண்டு மகிழ்வார்கள். எழுத்துலகில் நீண்ட காலமாய் தன் முயற்சிகளாய் உற்சாகமாய் முன்னிருத்தும் கவிஞர் நா.கி.பிரசாத்தின் எழுத்துக்கள் மேல் எனக்கு நிரம்ப நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தொகுப்பில் இவர் வெற்றி பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.”

-    அணிந்துரையில்
கலைமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா

“இந்த உண(ர்)வுத் திருவிழா நாயகன் நா.கி நல்லதொரு சூழலில் தனது எழுத்து வலத்தைத் துவங்கியிருக்கிறார். பன்முக எழுத்துப் போராளியான இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, உரைவீச்சுகள், பட்டிமன்றங்கள், தொலைக்காட்சிக் கவியரங்கங்கள், நகைச்சுவை துணுக்குகள் என ஒரு எழுத்துப் பரிபாலனத்தையே நடத்தி வருபவர்.

இவரது இந்நூலின் பக்கங்களில் உள்ள அனைத்துப் பாக்களும் இன்றைய சமூகப்பசிக்கான எழுத்துச் சூரணங்கள். இவரது கவிதைகளை வாசிப்பவர்கள் வாசிப்பதோடு நிறுத்துவிடாமல், அதுபற்றி யோசிக்க வைப்பது இவரது தனித்திறன்”

-    வாழ்த்துரையில்
தமிழருவி கோவை கோகுலன்

“நா.கி.யார் கவிதைகளை நாளும் ரசிக்கும் ரசிகன் நான். தடங்களுக்கு மகிழ்கிறேன் என்ற நூலின் வாயிலாக அவர்தம் சிறுகதைக்குத் தடம் அமைத்துக் கொடுக்கும் வாய்ப்புப் பெற்றவன். நேர்மையாய் செயல்பட்டால் இறைவன் நம்மை வழிபடுவான் என்ற சிந்தனை உடைய நல்மனிதர்.”

-    வாழ்த்துரையில்
கலைவாணி மெ.செயம்கொண்டான்

நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment