Wednesday, December 26, 2012

வாசகன் வெளியீட்டு எண் : 12





திருமதி. ராகிலாவின்
"விடியலை நோக்கி"

சிறுக்தைத் தொகுப்பு

120 பக்கங்கள்
விலை ரூ. 60

வாசகன் வெளியீட்டு எண் : 11



கவிஞர் மாரியம்மாளின்
"கவித்தென்றல்"

கவிதைத் தொகுப்பு

64 பக்கங்கள்
விலை ரூ. 30
வாசகன் வெளியீட்டு எண் : 10




கவிஞர் முனியசாமியின்
"அன்பென்ற மழையிலே"

கவிதைத் தொகுப்பு

64 பக்கங்கள்
விலை ரூ. 35

Friday, November 30, 2012

கதை, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வு போன்ற உங்கள் படைப்புகளை ISBN எண்களோடு வெளியிட...



Thursday, July 19, 2012




சேலம் தெய்வீகம் புத்தகக் கண்காட்சியில் வாசகன் பதிப்பக அரங்கு

நாள் : 20.07.2012 முதல் 29.07.2012 வரை


அனைவரும் வருக...! ஆதரவு தருக....!

Sunday, May 20, 2012

வாசகன் பதிப்பக புதிய வெளியீடுகள்-ஓர் அறிமுகம்



குழந்தைகளைத் தேடும் கடவுள்


கலைத்திலகம், சகலகலா வித்தகர், முத்தமிழ் வித்தகர், நகைச்சுவை அரசு எனப்பல விருதுகளை இளவயதிலேயே பெற்றுள்ள கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் இரண்டாம் படைப்பாக வெளிவந்துள்ள இந்த ஹைக்கூ கவிதை நூல், தமிழிலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பிடிக்கும் என்பதும், பல பரிசுகளை பெறும் என்பதும் வளர்ந்த பல படைப்பாளிகளின் கணிப்பு.


ஆங்கில ஆசிரியரான இவர் தமிழின் மீது கொண்ட தனியாக்காதலாலும் குழந்தைகளோடான தன் வாழ்வியல் அனுபவங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும் எழுதியுள்ள இந்நூலின் ஹைக்கூக்களுக்கு பொருத்தமான கோட்டோவியங்கள் இடம்பெற்று சிறப்பு சேர்க்கிறது "குழந்தைகளைத் தேடும் கடவுள்".


சிறப்பான வடிவமைப்பு, அருமையான ஓவியங்கள், அழகுபடுத்தும் அணிந்துரைகள் எனப்பலவற்றால் உயிர்த்தெழுகிறது இந்நூல்.


96 பக்கங்கள்
விலை ரூ. 50 -

இப்படிக்குத் தோழன்

ஆண் பெண் மத்தியில் காதல் காமம் போன்றவற்றைத் தொடாமல் உயிர்த்திருக்கும் உயரிய உணர்வாக தோழமையைச் சொல்லவும், இளைய தலைமுறையினரின் கள்ளமில்லா உணர்வுகளைப் பதிவு செய்யவும் கவிஞர் ஏகலைவனுக்குள் எண்ணம் தோன்றியதால் குட்டிக் கவிதைகளோடும் இனிய புகைப்படங்களோடும் அழகான கட்டமைவோடும்  உங்கள் கரங்களில் தவழவுள்ளது "இப்படிக்குத் தோழன்"

தோழமையின் பெருமையை அருமையான களங்களில் அற்புதமான வார்த்தைகளில் சொல்லும் இந்நூலின் கவிதைகள் நூலாசிரியரின் நினைவுப் படிமங்களிலிருந்தும், தோழமை உள்ளங்களின் உணர்வுப் பெருக்கிலிருந்தும் துளித்துளியாய் சேகரிக்கப்பட்ட மழைத்துளிகள்.

இந்த இனிய மழைச்சாரலில் உங்களையும் நனைத்துக் கொள்ள வாருங்கள்.

விலை ரூ. 50 -

நூல் தேவைக்கு
கவிஞர் ஏகலைவன்
கெளரவ பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
9944391668
8428729494

Tuesday, May 15, 2012

மாந்தன் மற்றும் வாசகன் பதிப்பகம் இணைந்து நடத்திய சேலம் மாவட்ட சிறப்பு மலர் மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா புகைப்படங்கள்...
































Friday, May 11, 2012

வாசகன் பதிப்பகம் மற்றும் புதுவை மாந்தன் இதழ் இணைந்து நடத்தும் நூல்கள் மற்றும் சேலம் சிறப்பு மலர் வெளியீட்டு விழா அழைப்பிதழ்



Saturday, May 5, 2012

வாசகன் பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ். . . .
அவசியம்  வாங்க.....

Wednesday, March 14, 2012



தமிழின் புகழ்பெற்ற வார இதழான ராணி வார இதழ் வாசகன் பதிப்பக வெளியீடான "கவித்துளி" (தமிழின் முதல் மாற்றுத்திறனாளிகளின் ஹைக்கூத் தொகுப்பு) நூலில் இடம்பெற்ற ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது

Sunday, February 5, 2012


வாசகன் பதிப்பகத்திற்கு "பதிப்பக ஒளிவிளக்கு" விருது
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து செயலாற்றி வரும் சேலம் வாசகன் பதிப்பகத்திற்கு கோவை வசந்தவாசல் கவிமன்றம் கடந்த 22.01.2012 அன்று "பதிப்பக ஒளிவிளக்கு" எனும் உயரிய விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. வாசகன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கும், பதிப்பாளர் திருமதி. வஹிதா பானு அவ‌ர்களுக்கும் தலைவர் கோவை கோகுலன் அவர்களின் முன்னிலையில் வசந்தவாசல் கவிமன்ற அங்கத்தினர்களான கவிச்சுடர் காசு குணசேகரன் அவர்களும் திருமதி.மல்லிகா காசு குணசேகரன் அவர்களும் விருதளித்து கெளரவித்தனர்.

Saturday, January 28, 2012

விரைவில் வெளிவரவிருக்கும் வாசகன் பதிப்பக வெளியீடுகள்...


கவிஞர் ஏகலைவனின்
இப்படிக்குத் தோழன்...
(ஆணுக்கும் பெண்ணுக்குமான தோழமையைச் சொல்லும் கவிதைத் தொகுப்பு)

நூலிலிருந்து...

பழகிப்
பல்லாண்டு் கழிந்தாலும்
ஏதொவொரு நகரத்தில்
ஏதொவொரு சூழலில்
மீண்டும்
சந்திக்கும் போதும்
தோழமைகளைத்
தோளில் சுமந்தபடி
கைகுலுக்கிப் பிரிகிறோம்.






கவிஞர் ச.கோபிநாத்தின்
போன்சாய் பூக்கள்
(ஹைக்கூதொகுப்பு)

நூலிலிருந்து...

* நிலா
முற்றம்
ஏக்கத்தில் குழந்தைகள்.

* புத்தகத்தில் இருப்பதை
மூளையில் ஏற்று
மெக்காலே முறை.