Saturday, April 26, 2014


நன்றி - குமுதம் வார இதழ்

Tuesday, April 22, 2014




நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

உன் பறக்கும் முத்தங்களும்...
என் பட்டாம்பூச்சிகளும்....

ISBN 978-93-83188-06-2

கவிதைத் தொகுப்பு
துஷ்யந்த்சரவணராஜ்

96 பக்கங்கள்
விலை ரூ. 50 / -

காதல் பறவை கூடு கட்டி வாழும் சொர்க்க தேசத்தின் தலைநகரமல்லவா கவிஞனின் இதயம்? அதிலும் கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் அவர்களோ விகடன் இதழின் வார்ப்பு. அப்புறமென்ன... இந்தக் கவிஞனின் கவிதைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவ்வளவு சிறப்பை தன்னுள் கொண்டிருக்கிற இந்த உயிர்க்கவிதைகள்.... நம்மை உயிர்பிக்க செய்யும் என்பதில் ஐயமில்லை...

-    வாசகன் பதிப்பகம்
பதிப்புரையில்

மலரினும் மெல்லியது காதல் என்பதை உணர்ந்த வெகுசிலரின் ஒருவர் தம்பி சரவணராஜ் என்பதற்கும், அதன் செவ்வியை உணர்ந்த சீர்மையாளர் வெகு சிலரின் ஒருவர் தம்பி சரவணராஜ் என்பதற்கும் இந்தப் படைப்பு மிகச் சிறந்த சான்று. தமிழகப் படைப்பு உலகமும், திறனாய்வு உலகமும் ஏற்றிப் போற்றிக் கொள்ளும் என்று நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

முனைவர் மு. பழனிஇராகுலதாசன்
அணிந்துரையில்.....
பேராசிரியர் & துறைத்தலைவர் (பணிநிறைவு)
தமிழ்த்துறை
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி
தேவகோட்டை

எப்படி சங்கப்பாடல்கள் யாயும் யாயும் யாராகியரோ என்று உலகம் முழுதுமுள்ள காதலர்கட்குப் பொதுவாக விளங்குகின்றதோ அதைப்போல இருபதாம் நூற்றாண்டில் உலகக் காதலர்கட்காக எழுதப்பட்டதே ‘உன் பறக்கும் முத்தங்களும் என் பட்டாம்பூச்சிகளும்’ என்ற கவிதை நூல்.

-    முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை
பாராட்டுரையில்...
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி

காதல் மென்மையானது: அதன் செவ்வி தலைப்பட்டோர் சிலர். அவ்வகையில் காதலை முழுமையாக உணர்ந்தோர் சிலரே. அதனையும் கவிதையாக வெளிப்படுத்தும் ஆற்றலுடையோர் மிகச் சிலரே. அத்தகைய மிகச்சில கவிஞர்களுள் ஒருவராக விளங்குகிறார் சரவணராஜ்.

-    முனைவர் சு. இராசாராம்
வாழ்த்துரையில்...
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி


நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com