Wednesday, February 20, 2013



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

விடியலை நோக்கி…

சிறுகதைத் தொகுப்பு
க. ராகிலா M.A., B.Ed., M.T.,

120 பக்கங்கள்
விலை ரூ. 60 / -

படைப்பிலக்கியப் பரிவுகளான கதை, கவிதை, கட்டுரை, நாடகம், புதினம், ஆய்வுகள் எனப்பலவற்றுள் கதைக்கு என்றொரு தனித்துவம் உண்டு.

இன்றைக்கு எந்தவொரு பத்திரிக்கையை எடுத்தாலும் குட்டிக்கதை, அரைப்பக்கக் கதை, ஒரு பக்கக்கதை, சற்றே நீளமான சிறுகதை என ஏதோவொரு வகையில் சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லியபடி கதைகள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

ஒரு கதையைப் படித்து முடித்ததும், அது வாசகனின் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தால், அதே கதையை மீண்டும் படிக்க வேண்டும் எனும் விழைவை அவனுக்கு உண்டாக்கினால், அதனை சிறந்த சிறுகதையாகக் கொள்ளலாம் என்பது நியதி.

எழுத்தாளார் திருமதி. க. ராகிலா M.A., B.Ed., M.T., அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விடியலை நோக்கி…’ நூலின் அமைந்துள்ள சிறுகதைகள் சிறந்த சிறுகதைக்கான இலக்கணத்தைப் பெற்று சிறப்படைந்திருக்கின்றன.

தான் கேட்ட, பார்த்த, அனுபவித்த விஷயங்களை ஒரு சிறுகதையாக வெளிப்படுத்தும் கதை சொல்லியின் பாங்கு இவருக்கு நன்கு கைவரப் பெற்றிருப்பது, இந்நூலுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

-    வாசகன் பதிப்பகத்தார்
நூலின் பதிப்புரையில்…

விடியலை நோக்கி என்ற திருமதி க. ராகிலாவின் சிறுகதைத் தொகுப்பு. ஓர் அறிவுக்களஞ்சியம். மக்களாய் சிந்திக்கத் தூண்டும் திறன் கொண்டது.

மனித வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் எவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் சிறுகதைகளாக வடித்திருப்பது அவரின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் காட்டுகின்றாது. சமுதாய நோக்கோடு எழுதப்பட்ட இந்த சிறுகதைகள் நிச்சயம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என் எண்ணம்.

-    Dr. P. விஜயன்
முதல் துணைவேந்தர்
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்
சென்னை
 நூலின் அணிந்துரையில்…

விடியலை நோக்கி என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கையில் ஒரு கிராமத்திலேயே இருக்கும் உணர்வே ஏற்பட்டது. குடும்பப் பிரச்சனைகள், காதல், திருமண விவகாரங்க்கள், மாமியார் மருமகள் சிக்கல்கள், முதியோர் பிரச்சனைகள், அருகருகே உள்ள வீடுகளில் ஏற்படும் சண்டைகள், விவசாய நடைமுறைகள், குழந்தைகள் படிப்பு, கிராம சமூக அமைப்பு இப்படியாக பற்பல செய்திகளை மிக எளிய அழகிய நடையில் சகோதரி க. ராகிலா எழுதியுள்ளார்.

மூட நம்பிக்கைகள், கிராம கோவில்கள் என ஒன்றுவிடாமல் மொத்த கிராமத்தையே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். பல்வேறு சிக்கல்களுக்கு நல்ல நடைமுறைத் தீர்வுகளைத் தந்துள்ளார்.

-    ‘சாகித்ய அகாடமி விருதாளர்’
குறிஞ்சிச்செல்வர் கோ. மா. கோதண்டம்
தலைவர்
மணிமேகலை மன்றம்
நூலின் அணிந்துரையில்…

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment