Sunday, March 3, 2013



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

கலையரசன் கவிதைகள்

தொகுப்பாசிரியர் கவிஞர் கலை. இளங்கோ

விலை ரூ. 50

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடத்தலே, தன்னை அறிவுடையவனாக்கிய தந்தைக்கு ஒரு மகன் செய்யும் கைம்மாறு ஆகும் என்கிறது திருக்குறள்.

அமரர் கலையரசன் அவர்களின் பிள்ளைகள் தங்கள் தந்தையின் கனவை நனவாக்கிய முயன்று அவரின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டு குறள் வழி செயலாற்றி தந்தைக்கும் தந்தையின் கவிதைகளுக்கும் பெருமைத் தேடித்தந்து இருக்கின்றனர்.

வாசகன் பதிப்பகம்
பதிப்புரையில்

ஈறாரு வருடங்கள் கழித்து கவிஞர் கலையரசனின் கவிதை நதியை பாரதமெங்கும் ஓடச்செய்துள்ள அவரது வாரிசுகளை முதலில் பாராட்ட வேண்டும்.

மரபுக்கவிதைகள் எங்கோ ஒன்று என்று அரிதாகிவிட்ட நிலையில் படிப்பவர் பரவசப்படும்படியாக சமுதாயத்தின் எல்லா பக்கங்களிலும் தனது விசாலமான பார்வையைப் பதித்துள்ளார்.

சொல் வேந்தர். சுகி.சிவம்
அணிந்துரையில்…

அமிழ்தினும் இனிய தமிழ்மொழியின்பால் உள்ளம் ஆழ்ந்த ஈடுபாட்டில் படைக்கப்பட்ட அமரர் கலையரசன் கவிதைகளை வாசித்துப் பார்த்தேன், தற்கால தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்த சிறந்த மரபுக்கவிதை நூலாக உள்ளது.

கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன்
அணிந்துரையில்…

படிக்கிறவர்களை மிரட்டாத நடை, பாமரரையும் தொடும் தமிழ், உலகியலுக்கு அப்பாற்படாத யதார்த்தம் கொண்டிருக்கிற ஒரு நல்ல கவிஞரின் படைப்புகளைக் கறையான் தின்ன விட்டுவிடாமல், கவிதைப் பசிக்காரர்களுக்குப் பசியாறக் கொடுத்த செயலுக்காக கலை. இளங்கோ அவர்களாய் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன்
பத்திரிக்கையாளர், பதிப்பாளர்
அணிந்துரையில்…

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment